கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அ தி மு க கட்சி அலுவலகத்தில் முன்னாள் தொழில் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளர் எம் சி சம்பத் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவரையும் கடலூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம் சி சம்பத் வரவேற்றார், இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட அவைத் தலைவர் சேவல். ஜி. ஜெ. குமார் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. காசிநாதன், அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர்கள் வி.எம்.தமிழ்செல்வன்,கே.என்.நாகபூஷ்னம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment