புவனகிரி அருகே ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 July 2023

புவனகிரி அருகே ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஏ. புளியங்குடி கிராமத்தில் ஸ்ரீ நவகாளி அங்காளபரமேஸ்வரி ஆலயம் புதியதாக அமைக்கும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பணிகள் முடிவுற்றபின் ஸ்ரீ நவகாளி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், இதனுடன் ஸ்ரீ நவசித்தி விநாயகர், ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி, பிரித்தியங்கார தேவி, வராகி, நாகசக்தி, சூளினி, துர்க்கை, கொல்லிமலை கன்னி, தீப்பாய்ந்த நாச்சியார், பாவாடைராயன், வீரன், ஆஞ்சநேயர், முனீஸ்வரன், வேட்டை கருப்பு உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷே நடத்திட கோவில் நிர்வாகத்தினரின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.


அதன்படி 08-07-2023 சனிக்கிழமை அன்று முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி தேவதா, விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், ஆச்சரிய வர்ணனை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்த சங்கிரகணம், பூர்ணஹூதி தீபாராதனை  உள்ளிட்ட யாகசாலை பூஜையுடன் ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை 09-07- 2023  யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு இரண்டாம் நாள் பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு பல்வேறு வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது, 


பின்னர் காலை 10 மணி அளவில் மூலவர் ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்ட புனித நீர் கலசம்  மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான புத்தர்கள் பங்கேற்று ஸ்ரீ நவகாளிஅங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ. புளியங்குடி கிராம கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

*/