2017 ஆம் ஆண்டு காவலர் பேட்ச் காவல் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குழு உருவாக்கி இருந்தனர் பாதிக்கப்பட்ட வீரசேகரின் பெற்றோருக்கு உதவ வேண்டி தங்கள் வாட்ஸ் அப் குழு மூலம் செய்தி தகவல் தெரிவித்து, அதன் மூலம் ரூபாய் 14,22,800 (பதிநான்கு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய்) சேர்த்தனர். இறந்து போன காவலர் வீரசேகரன் தந்தை அறிவழகன், தாய் மணிமேகலை ஆகியோரிடம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராம் அவர்கள் மூலம் வழங்கினார்கள்.
பணத்தை பெற்று கொண்ட வீரசேகரின் பெற்றோர் சக காவலர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன், 2017 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் அமரவர்ணன், கவியரசன், ராஜதுரை, பாலமுருகன், ஹரிஹரன், சந்திரபிரியன், பூபாலன், உதயச்சந்திரன், தினேகா, சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment