கடலூர் மாநகராட்சி 1 வது வார்டு செம்மண்டலம் ஐ டி ஐ பின்புறம் உள்ள கணபதிபுரம் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டி கடலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ரமேஷ் அவர்களிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவதுபொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குண்டும் குழியுமாக உள்ள சாலை பருவ மழை காலங்களில் நடந்துசெல்லவும் வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேற்படி அப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ரமேஷ் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
அம்மனுவை பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டு விரைந்து உங்கள் பகுதியை பார்வையிடுகிறேன். மேலும் உங்கள் பகுதி வார்டு உறுப்பினர் செல்வா புஷ்பலதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment