கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஜூன் 1ம் தேதி காப்பு கட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் வில் வளைத்தல் கழுகு மரம் ஏறுதல் பூ எடுத்தல் கிருஷ்ணன் பிறப்பு என 30 நாட்கள் பாரத சொற்பொழிவு நடைபெற்றது.
இன்று 30ம் நாள் காலை பத்து மணி அளவில் தீக்குழியில் தீ மூட்டப்பட்டது மாலை நான்கு மணி அளவில் அகலம் குளக்கரை சென்று அக்னி கரகம் தால் கரகம் சோடிக்கப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டப்பட்டு தீக்குழியில் இறங்கி தீ மிதித்தனர் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
No comments:
Post a Comment