மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும் இவைகளை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.கலைமணி, செல்வி ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எஸ்.அருள், எம்.பி. எஸ்.சிவசுப்பிரமணியன், பி.டி.கலைச்செல்வன், மாநில மீனவரணி இணை செயலாளர் கே.என்.தங்கமணி, அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் கோ.சூரியமூர்த்தி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.திருமாறன், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை தலைவர் கோ.பாலசுந்தரம், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் எஸ்.வி.இராதாகிருஷ்ணன்,. துணை செயலாளர் வி.எல்.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட பொருளாளர் வ.ஜானகிராமன், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் தெய்வ. பக்கிரி, கடலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வ. அழகானந்தம், கடலூர் மாநகர பகுதி கழக செயலாளர்கள் பி.கே. வெங்கட்ராமன், எம்.பாலகிருஷ்ணன், ஆர்.மாதவன், வ.கந்தன், தங்க. வினோத்ராஜ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், கழக அமைப்புச் செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா .இராஜேந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர் என்.முருகுமாறன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்ற பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த திமுக இன்று என்ன வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றது. துறை தோறும் தோல்வி கண்ட, லஞ்ச லாவண்யம் மிகுந்த ஊழல் ஆட்சியை தமிழகத்தில் திமுக நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தி மக்களிடையே கடுமையான எதிர்ப்பை பெற்றது. பின்பு வரலாறு காணாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய மக்களின், நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்தது. அடுத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி மறைமுகமாக பத்திரப் பதிவு கட்டணத்தை உயர்த்தியது. இப்பொழுது மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ஏன் திமுக அரசால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது அவர்களின் சிந்தனை எல்லாம் செந்தில் பாலாஜியை எப்படி காப்பாற்றுவது என்பதிலேயே தான் இருக்கின்றது. மக்களைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. மக்கள் நலனை முன்னிறுத்தாத இந்த ஆட்சி தேவைதானா என்று மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 200 ரூபாய்க்கு விற்ற சீரகம் இப்பொழுது 450 ரூபாய் உயர்ந்து 650 ரூபாய்க்கு விற்கின்றது. பொன்னி அரிசி ஆயிரம் ரூபாயிலிருந்து 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது.. இஞ்சி 40 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. தக்காளி 20 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. அனைத்து மளிகை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் ராக்கெட்வேக விலை உயர்வால் மக்களால் வாழ முடியாத சூழல் உள்ளது.
ஒரு ஆட்சியில் சக அமைச்சர் சிறை சென்ற வரலாறு இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது. அண்ணா, புரட்சித்தலைவர், அம்மா காலங்களில் இது போன்று நடந்ததுண்டா. செந்தில் பாலாஜி எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பண பரிமாற்ற வழக்கிற்காக தான். வெளிநாடு முழுவதும் இவரது பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் ஆக ஏன் நீடிக்கின்றார். என்ன காரணம். சிறை சென்ற ஒரு அமைச்சரை அமைச்சரவையில் ஸ்டாலின் வைத்திருக்கிறார் என்றால் இந்த ஆட்சியின் லட்சணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். அடுத்து பொன்முடி, வெளியில் அமலாக்க துறையை கண்டு பயம் இல்லை என்று கூறினாலும் உள்ளுக்குள் ஆட்சியாளர்கள் பயந்து நடுங்குகிறார்கள். அடுத்து எந்த அமைச்சர் என்ற விவாதம் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலை, வணிக வளாங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில் முதலீட்டா ளர்கள் தமிழகத்திற்கு எப்படி வருவார்கள். சிறு, குறு தொழில்கள் இந்த ஆட்சியில் நசுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வேளாண் துறை அமைச்சராக இருக்கின்றார். அவரால் வேளாண் துறைக்கு எந்த ஒரு பலனும் இல்லை. விளை பொருட்கள் விலை குறைவாக இருக்கின்றது. இடுபொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றது. நெல்லுக்கும், கரும்புக்கும் குவிண்டாலுக்கு அதிக விலை தருவோம் என்றவர்கள் எதையுமே தரவில்லை. அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாக்குறுதி தந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கின்றது. துணை முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமார் மேகதாது அணை கட்டிய தீருவோம் என்று கொக்கரிக்கின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடகா சென்ற ஸ்டாலின் டி.கே.சிவகுமார் உடன் கொஞ்சிக் குலாவுகின்றார். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களின் எண்ணம் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தான். அவர் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது கொள்கையளவில் உடன்பட்ட செயலாக இருந்தாலும், காவிரி விவகாரத்தில் முரண்பட்டு இருக்க வேண்டாமா.
டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் பெங்களூருவில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பேன் என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்வால் அறிவித்தவுடன், மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சி அவசர அவசரமாக அறிவித்தது. அதன் பிறகே அரவிந்த் கெஜ்வால் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோன்று மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அணை கட்ட மாட்டேன் என்று உறுதி கூறினால் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று திமுக நிபந்தனை விதித்து இருக்க வேண்டாமா. எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத திமுக தலைவர் ஸ்டாலின் தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளார் திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் துரோகம் இழைப்பது இவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. மேகதாதுவில் அணைகட்டியே தீர்வோம் எனும் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் உடன் ஸ்டாலின் கொஞ்சி குலாவுவது எட்டு கோடி தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். இதை தமிழக மக்கள் என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடியார் டெல்லி சென்றபோது பிஜேபி தலைவர் நட்டா வந்து விமான நிலையத்தில் வரவேற்கின்றார்.. பிரதமர் மோடி எடப்பாடியாரை அருகில் வைத்து அழகு பார்க்கின்றார். தமிழ்நாட்டின் ஆளுமையாக எடப்பாடியார் திகழ்கின்றார். வரும் ஆகஸ்ட் மாதம் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மாவட்டத்தின் சார்பில் இருபதினாயிரம் பேர் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கின்ற மாநாடாக நமக்கு அமையும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கடலூர் மாவட்டம் கழகத்தின் இரும்பு கோட்டை என்று நிருபிக்க வேண்டும் என்று பேசினார்.
கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி.மாசிலாமணி, வர்த்தக பிரிவு செயலாளர் என்.வரதராஜன், கடலூர் முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெய்வேலி நகரிய கழக செயலாளர் க.கோவிந்தராஜ், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர். செந்தில்குமார், விருத்தாசலம் நகர கழக செயலாளர் பிஆர்சி. சந்திரகுமார் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment