உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான ஓவியப்போட்டி கடந்த 26. 6.2023 தேதி கடலூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 75 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங் களை வரைந்தனர். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த அரசு பள்ளி மாணவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு செந்தில் விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment