அந்த அறிக்கைகள் கூறியிருப்பதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் கட்டியதற்கு ஆதாரம் இல்லை. இக்கோயிலை மன்னர்கள் கட்டியுள்ளனர். இக்கோயில் பொதுவான கோவில் பொதுதீட்சிதர்களால் முறைகேடுகள் நடந்தால் அறநிலையத் துறை விசாரித்து கோவில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நடராஜர் கோவிலை 1999 தீட்சிதர்கள் கட்டினார்கள் என்று உண்மைக்கு மாறாக வரலாறு தெரியாமல் தவறான கருத்தை ப.ஜ.க முன்னால் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார் இது வேதனை குறியது கண்டனத்திற்குரியது. பல நூற்றாண்டு காலமாக பக்தர்கள் கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இம் முறையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச் ராஜா போன்றவர்கள் எதிர்ப்பதை கைவிட்டு பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் நடராஜர் கோவிலில் நடைபெறும் முறை கேடுகள் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி .கே .சேகர் பாபு வை தனிப்பட்ட முறையில் எச்.ராஜா விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெமினி எம்.என். ராதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment