ஸ்ரீமுஷ்ணம் அருகே நெல்அறுவடை இயந்திரம் மோதியதில் ஒருவர் பலி இன்னொருவர், படுகாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே நெல்அறுவடை இயந்திரம் மோதியதில் ஒருவர் பலி இன்னொருவர், படுகாயம்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மதகளிர்மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், அபினேஷ் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் கருவேப்பிலங்குறிச்சி வழியாக மதகளிர்மாணிக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது முத்துக்கிருஷ்ணாபுரம் கிராம பகுதியில் இரவில் முகப்பு விளக்கு போடாமல் வந்து கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரத்தின் மீது எதிர்பாராத விதமாக இவர்கள்  வாகனம் மோதியது. 


இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் போது விக்னேஷ் பரிதாபமாக வழியிலேயே உயிரிழந்தார்.அவரது நண்பரான அபினேஷ் தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றார்.


இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/