கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் அதிவேகமாகவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பிறப்பித்த உத்தரவிட்டதையடுத்து, இன்று (11-07-203) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுனர்களை குடிபோதையில் வாகனம் ஓட்டுகின்றார்களா என சோதனை மேற்கொண்டு வந்தனர்.
கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் வாகன ஓட்டுனர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா, ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்று வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் திடீரென நேரில் சென்று காவல் அதிகாரிகள் வாகன சோதனை செய்தார்களா என ஆய்வு செய்தார். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment