கடலூரில் இந்திய மருத்துவர் சங்க கடலூர் கிளை சார்பில் உலக மருத்துவர் தினம் மற்றும் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கும் விழா கடலூர் தேவனாம்பட்டினம் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் டாக்டர் ஆர் .வெங்கட்ரமணன் விருதுபெறும் மருத்துவர்களை அறிமுகப்படுத்தினார்.
இந்திய மருத்துவர் சங்க தமிழ்நாடு துணைத் தலைவர் மருத்துவர் எ. கோவிந்தராஜன் முன்னிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஏ. அருண் தம்புராஜ் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மருத்துவர் ரஞ்சனி கிருஷ்ணன் மருத்துவர் இளங்கோவன், மருத்துவர் ஜி பி சேகர், மருத்துவர் சண்முகசுந்தரம், ஆகியோருக்கு சிறந்த மருத்துவர் களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இறுதியில் சங்கத்தின் நிதி செயலாளர் டாக்டர். ஆர்.வினோத் குமார் நன்றி கூறினார். இந்திய மருத்துவர் சங்க கடலூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment