கடலூர் மஞ்சகுப்பம் சண்முகம் பிள்ளை தெரு மீனாட்சி என்பவரின் வீட்டின் முன்பு தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் வயது 48 என்பவர் படுகொலை செய்யப்பட்டார் இக்கொலை வழக்கு சம்பந்தமாக கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 1. மாசிலாமணி வயது 45 த/பெ கிருஷ்ணன், தாழங்குடா, கடலூர், 2. பிரகலாதன் வயது 38 த/பெ ராஜ், தாழங்குடா மற்றும் 3. ஆறுமுகம், 4. பாரதி, 5. ராமானுஜம், 6. விஜய், 7. சஞ்சய்குமார், 8. குருநாதன், 9. ராஜேந்திரன், 10. ராமலிங்கம், 11. முத்து, 12. மைக்கேல், 13. பாலமுருகன், 14. மணிகண்டன், 15. தேவேந்திரன், 16. சரவணன், 17. அர்ஜுனன், 18. ராஜவேல், 19. ராஜேஷ், 20. அந்தோணி 21. செல்வம், 22. ஆகாஷ், 23. சௌமியா (எ) பிரவீனா 24. வச்சலா ஆகியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாசிலாமணி, பிரகலாதன் இவர்களின் கொடுங்குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் மாசிலாமணி மற்றும் பிரகலாதன் ஆகியோர் ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment