கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமையில் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற link யை open செய்ய கூடாது, உங்களின் செல்போன் எண்ணில் வரும் OTP எண்ணை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்லாமல் இருக்கவும், இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment