கடலூர் துறைமுகம் அருள்மிகு ஐந்து கிணற்று மாரியம்மன் திருக்கோயில் செடல் உற்சவத்தை முன்னிட்டு 4ம் நாள் திருவிழா நடைபெற்றது காலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இரவு அருள்மிகு ஐந்து கிணற்று அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நாக வாகனத்தில் அம்மன் வீதி உலா வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.
நான்காம் நாள் திருநாள் உபயதாரர்கள் சுண்ணாம்பு கார தெரு பொது உச்சமாக நடைபெற்றது. செடல் உற்சவர் ஏற்பாடுகளை செயல் அலுவலர் ச. சிவக்குமார், ஆய்வாளர் பா. பரமேஸ்வரி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ,மற்றும் ஊர் பொதுமக்கள் உற்சவக்காரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment