இந்த சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் காலை மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த 2019ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் எம்.பி யாக இருந்த தற்போதைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருன்மொழி தேவன் 1கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டப்பட்டு திறப்பு விழா நடப்பெற்று 4 வருடங்களாகியும் மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலைதான் உள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்படுகிறது இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது இது தேசிய நெடுஞ்சாலை இருந்தும் இந்த மாணவிகளின் நலன் கருதி மேம்பாலம் கட்டப்பட்டது, மாணவிகள் மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்றும் சில மாணவிகள் படிக்கட்டுகளில் இடித்துக் கொண்டு அவதியுறும் நிலை உள்ளது அதனால் தான் மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலை இதற்க்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு போக்குவரத்து சரி செய்தும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்ப்படுகிறது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாற்று வழி ஏற்படுத்தினால் மாணவிகள் பாதுகாப்பாக செல்வார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment