கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் மாவட்ட தமிழக நாயுடு கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தலைவர் பாபு நாயுடு தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜூ நாயுடு வரவேற்றார் கடலூர் மாவட்ட செயலாளர் நாகராஜன் நாயுடு மாவட்ட பொருளாளர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொருளாளர் முத்துராஜா டாக்டர் சீனிவாசன் நாயுடு புவனகிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கூட்டத்தில் நாயுடு இன சமுதாய மக்கள் முன்னேற்றம் கல்வி வாழ்வியல் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் படித்த சமுதாய மக்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையும் நினைவு கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாயுடு மாவட்டத் துணைச் செயலாளர் முருகானந்த நாயுடு திருவேங்கட நாயுடு மகளிர் சார்பில் கரூர் மாரித்தாய் கௌரி அம்மாள் பிருந்தா அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆழ்வார் வெங்கடேசன் நாயுடு நன்றி கூறினார்.
- புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல்.
No comments:
Post a Comment