கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில்ஊராட்சி பேரூராட்சி , நகராட்சி வார்டுகளில் 10 அம்ச கோரிக்கையை வலியுறித்தி பாஜக சார்பில் கடலூர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினர், தொடர்ந்து மாதம் 1000 ருபாய் வழங்குவதில் பாரபட்சம், தேர்தல் வாக்குருதிகளை நிறைவேற்றவில்லை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல், கணிமவளக் கொள்ளையைத் தடுத்திடவும், கள்ளச்சாரயம், கஞ்சா பெருகி வருவதைத் தடுத்திடவும், இந்து கோவில்களை இடிக்காதே, ஆன்மீக உணர்வைத் தடுக்காதே போன்ற கோஷங்களுடனும், மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் முறையாக தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் அறிந்து தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் நடை பயணத்தின் போது அதனை வெளியிடுவார் எனவும் மாவட்டத் தலைவர் மருதை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னிலை ஒன்றிய தலைவர் வடமலை,சிறப்பு விருந்தினர் மாவட்டத் தலைவர் மருதை, விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம்,மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட மகளிர் அணித் தலைவி மாலா இருதயராஜ், மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர் யுவராஜா, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், விவசாய அணி மாவட்டப் பொருளாளர் SMR ராகுல், மேலும் ஒன்றியப் பொதுச் செயலாளர் கார்த்திகேயன், லோகு பாண்டியன், ஒன்றிய துணைத் தலைவர் சிவராமன், செயலாளர் பாவாடை சாரங்கபாணி, கார்த்திக், தமிழ்மணி, பூண்டி செந்தில், நாகப்பன், மணிகண்டன், கவியரசு மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment