இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த சதீஷ்குமார், விருத்தாச்சலம் காவல்துறையிடம் புகார் அளித்தும், குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி, அவரது உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர், விருத்தாச்சலம் அடுத்த இருசாள குப்பம் கிராமத்தில், சாலையின் குறிக்கே மரங்களை போட்டும், இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
மேலும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தாக்கிய, குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும், புகார் அளிக்தும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? எனவும் கூறி கைது செய்யும் வரை, மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை மறியல் போராட்டம் குறித்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில், ஈடுப்பட்டனர். அப்போது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளை தேடி வருவதாக கூறினர். ஆனால் சதீஷ்குமாரின் உறவினர்கள், போராட்டத்தை கைவிடாமல், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள், பள்ளி வாகனங்கள், வேலைக்குச் செல்பவர்கள், என யாரும் செல்ல முடியாமல், விருத்தாச்சலம்- ஆலடி சாலையில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கிடந்தனர். மேலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சதீஷ்குமாரின் மனைவி அருனா, திடிரென மண்ணெண்ணெய் கேனை தலையில், ஊற்றி தீக்குளிக்கும் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
உடனே சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், மண்ணெண்ணெக்கை பிடுங்கி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விருதாச்சலம் காவல் ஆய்வாளர், காவல் உதவி கண்காணிப்பாளர் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்கிறோம் என உறுதி அளித்ததன் பேரில், மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம், காவல்துறையினுடன் வாக்குவாதம், தீ குளிக்க முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதால் இருசாலகுப்பம் கிராமத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
No comments:
Post a Comment