கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற "நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்., அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் புதுமைப்பெண் திட்ட கையேடு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கையெட்டினையும் மாணவியர்களுக்கு வழங்கினார்.
இதில் புவனகிரி வட்டம் பி.முட்லூர் பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள். தலைமை ஆசிரியர் ப.வேல்முருகன் அவர்களின் தலைமையில் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்வில் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள ஏழ்மையான மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை தொடர வங்கிகள் மூலம் சிறப்பு லோன் பெரும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment