வடலூர் ரயில்வே கேட் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மேலும் 3 பேர் படுகாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

வடலூர் ரயில்வே கேட் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மேலும் 3 பேர் படுகாயம்.


கடலூர் மாவட்டம் வடலூர் ரயில்வே கேட் அருகே முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் எதிரே சென்னையில் இருந்து காட்டுமன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மேலும் மூவர் படுகாயமான நிலையில் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடலூர் காவல்துறையினர் மேற்கண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் வடலூர் தென்குத்து பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் ஜெகதீசன் வயது 25 என்பதும் இவர் தற்பொழுது வடலூர் எம் கே கே நகர் பகுதியில் வசித்து வந்ததும் வடலூரில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.


மேலும் வடலூர் எம் கே கே நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் கோகுல் வயது 23, மற்றும்   குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 நபர்கள்  பலத்த காயத்துடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத காரணத்தினால் சாலை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது 10 முதல் 20 அடி வரை சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் அப்பகுதியில் தொடர்கதை ஆகிய வருகிறது மேலும் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு வடலூர் எஸ் பி ஐ வங்கி எதிரே லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து சாலை ஓரங்களில்  ஆக்கிரமிப்பு செய்து வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/