கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 7.7.2023ஆம் தேதி காலை மறைந்த கோவை சரக காவல்துறை துணை தலைவர் சி. விஜயகுமார் திருஉருவபடத்திற்கு கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், சீனிவாசலு, துணை காவல் கண்காணிப்பாளர்கள் விஜிகுமார், தேவராஜ், நாகராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், காவலர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக மறைந்த காவல்துறை துணை தலைவர் விஜயகுமார் மறைவிற்க அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த சி. விஜயகுமார் கடந்த 29.06.2015 தேதி முதல் 30.07.2018 தேதி வரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மறைந்த காவல்துறை துணை தலைவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு காவல் அதிகாரிகள், காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment