கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் குளத்து மேட்டு தெருவில் 1/44 மாரியப்பன் S/O கலியமூர்த்தி நேற்று இரவு ஏழு மணி அளவில் மின் கசிவு காரணமாக கூரை வீடானது தீப்பிடித்து எறிய தொடங்கியது இதனை அடுத்து கிராம பொதுமக்கள் இளைஞர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் சிறிது கட்டுப்படுத்தினர்.
மேலும் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதனை அடுத்து குமராட்சி தீயணைப்பு நிலையம் சிறப்பு நிலை நிலைய அலுவலர் சி முரளி தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் மாரியப்பன் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் சில எரிந்தன மேலும் சுய உதவி குழுவில் எடுத்த 73000 ஆயிரம் பணம் எரிந்தாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment