இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து பலமாதங்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்கு வந்த் மாடுகள் தற்போது மேய்ச்சல் முடிவுற்றபின் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அவைகள் சாலை மார்க்கமாக அதுவும் பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் சென்றது பலருக்கும் சிரமத்தைத் தருவதாக இருந்தது. அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்தபகல் நேரத்தில் இதுபோன்று சாலைகளை மறைத்துக் கொண்டு மாடுகளை ஓட்டிச் செல்வதால் அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக செல்வோர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உயிராபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாடுகள் சாலைகளில் செல்லும்போது அங்குமிங்கும் சிதறி ஓடுவதால் எதிரே வரும் வாகனங்களில் சிக்கி மாடுகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ விபத்து ஏற்படும் வாய்ப்புமுண்டு. எனவே இதுபோன்று கிடைபோடும் மாடுகளை வாகனப் போக்குவரத்து குறைவான இரவு நேரங்களில் ஓரிடம் விட்டு இன்னொரு இடம் அழைத்துச் செல்லுமாறு உரிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி ஓட்டிச் செல்லும் மாடுகளுக்கும் எந்த விபத்தும் இல்லாமல் முன்னே பின்னே சாலையில் வரும் வாகனங்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நெறிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment