தேசிய அளவிலான இரண்டாம் ஆண்டு ஜெயம் கோப்பை வில் விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு டெக்ஸ்வாலி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சார்பில் பயிற்சியாளர் சுரேஷ்குமார் அவர்களிடம் வில்வித்தை பயிற்சி பெற்ற வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு போட்டியில் இனியா (வயது 10) தங்கபதக்கம், ஸ்ரீஹரிகரன் (வயது 14) தங்கபதக்கம். மதிவதனி (வயது 14) தங்கபதக்கம். ரித்திஷ் (வயது 12) தங்கபதக்கம், அனிருத் உமேஷ் (வயது 10) தங்கபதக்கம், கமால்ரசாக் (வயது 14) வெள்ளிபதக்கம், தனேஷ்வரன் (வயது 14) வெள்ளிபதக்கம், ரக்க்ஷன் (வயது 12) வெள்ளிபதக்கம், வதந்த் (வயது 10) வெள்ளிபதக்கம், அஷ்வின் (வயது 14) வெள்ளிபதக்கம். ஜெயசூர்யா (வயது 14) வெள்ளிபதக்கம், ஜெனனிபிரியா (வயது 12) வெண்கலம், லோகதர்ஷினி வயது (12) வெண்கலம் பதக்கம் பெற்றனர்.
பதக்கங்கள் பெற்ற வில்வித்தை வீரர் மற்றும் வீராங்கனைகளை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். வில்வித்தை பயிற்சியாளர் சுரேஷ்குமார், கார்த்திகேயன், சந்திரசேகர், ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment