கடந்த 15.6.2023 ம் தேதி விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி தலைமையில் காவல் துறையினர் பனையந்தூர் ஏரிக்கரை அருகே ரோந்து சென்றபோது 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த சுதாகர் வயது 35, த/பெ அய்யாசாமி, நெ.465, தெற்கு தெரு, பனையந்தூர், திட்டக்குடி, என்பவரை மடக்கி பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர்.
இவர் மீது சிறுபாக்கம் காவல் நிலையத்தில் 3 சாராய வழக்குகளும், விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் 3 சாராய வழக்குகள் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு இவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இராஜாராம் பரிந்துரை செய்ததின் பேரில் சுதாகரை ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் உத்திவிட்டதை தொடர்ந்து சுதாகர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment