கடலூர் மாநகராட்சி புதுப்பாளையம் பகுதி 19வது வார்டு முத்துக்குமரன் தெருவில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் குடி நீர் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை யில் குடிப்பதற்கு சமைப்பதற்கு காசு கொடுத்து குடி நீர் வாங்கும் மக்கள் சில வருடங்களுக்கு முன் மாநகராட்சி மூலம் மினி தண்ணீர் டேங்க் நிறுவப்பட்டது.
இத்தண்ணீரை மற்ற தேவைகளுக்கு உபயோக படுத்தி வந்தனர் ஆனால் கடந்த ஐந்து ஆறு மாதங்களாக மோட்டார் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குடி நீருக்காக மட்டும் ஒரு நாளைக்கு 50 முதல் செலவழிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் உடனடியாக குடி நீர் குழாய்கள் அமைத்தும் மினி தண்ணீர் டேங்க் கை சரி செய்ய. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment