உலக மருத்துவர் தினம் உலகம் முழுவதும் இன்று (01/7/2023) கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்குச்சென்று அம் மருத்துவமனையின் அரசு மருத்துவர் அரவிந்தன் மற்றும் மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோரை சந்தித்து அவர்களின் அளப்பரிய மருத்துவ சேவைகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் சேத்தியாத்தோப்பில் உள்ள எஸ் சி ஆர்மருத்துவமனை மருத்துவர்சிவனேசன், மற்றும் ராம்தேவி மருத்துவமனையின் மருத்துவர் பரணிதரன் இவர்களையும் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து அவர்களின் மருத்துவ சேவையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்க,சண்முகம்,சாமுண்டீஸ்வரி, விஸ்வநாதன் இவர்கள் முன்னிலை வகிக்க, அரிமா சங்க கடலூர்மாவட்டத் தலைவர் டாக்டர் ஆர். மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, நிகழ்ச்சியின் இறுதியாக சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தின் செயலாளர் சௌந்தரராஜன் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment