நீண்ட காலமாக இந்த பாசன வாய்க்காலில் கோரைகள், மண் மேடுகள், ஆகாயத்தாமரைகள், நாணல்கள், காட்டுக்கருவை முட்செடிகள் அடைத்துக் கொண்டுள்ளதால் தண்ணீரானது வேகமாக கீழ்ப்பகுதியை நோக்கிச் செல்வதில் தடை ஏற்படுகிறது.கடந்த ஆண்டு தூர் வாரும்போதே சரிவர முழுமையாக தூர்வாரவில்லை என்றுஇந்த வாய்க்கால்மூலம் பயன்பெறும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பல வாய்க்கால்களில் இது ஒன்று மட்டுமே மிக நீளமான வாய்க்காலாக இருந்து வருகிறது. இது 30 கிலோமீட்டர் நீளமும் சுமார் 10,000 ஏக்கர் பாசன வசதியும் தந்து வருகிறது. அதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்கால் என விவசாயிகள்கூறுகின்றனர். வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அவ்வப்போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கிறார்கள் ஆனால்முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் கூறுகின்றனர்.
உடனடியாக போர்க்கால அடிப்படையில் பூதங்குடி பாசன வாய்க்காலை தொடக்கம் முதல் வாய்க்கால் முடிவடையும் வரை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment