இதனை கட்டுப்படுத்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை கடலூர் எம்.பி யாக இருந்த தற்போதைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருன்மொழி தேவன் 1கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டப்பட்டு திறப்பு விழா நடப்பெற்று 6 வருடங்களாகியும் மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலைதான் உள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்படுகிறது இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது இது தேசிய நெடுஞ்சாலை இருந்தும் இந்த மேம்பாலம் உயரத்தில் உள்ளது மாணவிகள் மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்றும் சில மாணவிகள் படிக்கட்டுகளில் கடித்துக் கொண்டு அவதியுறும் நிலை உள்ளது அதனால்தான் கடுமையான போக்குவரத்து நேரங்களில் சாலையை கடந்து செல்லுகின்றனர் இச்சாலையை கடப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று வழி ஏற்படுத்தினால் மாணவிகள் பாதுகாப்பாக செல்வார்கள் என்றும் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
No comments:
Post a Comment