கடந்த சில தினங்களுக்கு முன்பு என்எல்சி நிறுவனம் வளையமாதேவி பகுதியில் விலை நிலங்களில் ராட்சதஎந்திரங்களைக் கொண்டு வாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், கிராமத்தினர்கள், விவசாயிகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர், இந்நிலையில் நேற்று புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் வளையமாதேவி பகுதிக்கு செல்ல முயன்றபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி பிரச்சனைக்குரிய அந்த கிராமப் பகுதிக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர்.
இதனால் இன்று என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து காலையிலிருந்து தொடங்கி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள், விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மென்மேலும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், விவசாயிகளும் இதில் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment