கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2023

கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க 2023 - 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாதிரிகுப்பம் தனியார் ஹாலில் நடைபெற்றது.  பதவியேற்பு விழாவிற்கு  தலைவர் எஸ். சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட ஆலோசகர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 


ஊராட்சி மன்ற தலைவர் ஜி .சரவணன் ,உதவி கவர்னர் என் .சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க தலைவராக எஸ். சிவக்குமார் ,துணைத் தலைவராக இளங்கேஸ்வரன், செயலாளராக என் கந்தவேல் பொருளாளராக எஸ் .பாஸ்கரன் ,ஆகியோர் பதவியேற்று கொண்டார்கள். சங்க ஆலோசகர்கள் டி .பாஸ்கரன் ,கே .சங்கர் ,எஸ் .நடராஜன், ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஜி .சரவணன் கே .சோலை, எஸ். சக்திவேல், எஸ்.ராமலிங்கம், எஸ்.பழனிவேல், முன்னால் சங்கத் தலைவர் கெச்.ஷானாவாஸ், டாக்டர் பி .சிவசக்திவேலன், எஸ்.ராமலிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 


இந்த பதவியேற்பு விழாவில் புதிய உறுப்பினர்களை உதவி ஆளுநர் என்.சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார்கள். நிகழ்ச்சியின்  இந்த பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஏழை பெண்களுக்கு இரண்டு தையல் இயந்திரமும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ1500.00 க்கு எழுது பொருட்களும் விதவை பெண்ணுக்கு அரிசி மூட்டையும்  வழங்கப்பட்டது. இறுதியில் சங்கத்தின் செயலாளர் என்.கந்தவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/