கடலூரில் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2023

கடலூரில் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா.


கடலூர் கால்நடை பராமரிப்பு துறையில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர்வில் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளராக பணிபுரிந்த எஸ். கிருஷ்ணமூர்த்தி பணி நிறைவு பாராட்டு விழா கடலூர் நகர அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ .ரமேஷ் முன்னிலையில் வகித்தார் .கால்நடை ஆய்வாளர் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். கடலூர் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) மருத்துவர் ஆர். மோகன் ஓய்வு பெற்ற முன்னாள் மண்டல இயக்குனர்ருத்துவர் கு. குபேந்திரன், உதவி இயக்குனர் மருத்துவர் இராஜேஷ் குமார் ,ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 




கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர் நடராஜன், சுந்தரம், வித்தியாசங்கர், மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஜெயப்பிரகாஷ், பொன் வேலன், விசு, மகேந்திரன், இராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர் வீரமுத்து, ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் டாக்டர் தி.இராஜமச்சேந்திர சோழன், வீரக்குமார், ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


முடிவில் வசந்தா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/