பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட பார்வையாளரும் மாநிலச் செயலாளருமான அசோத்தமன் மற்றும் ஓபிசி அணி மாநில செயலாளர் இரா. அரங்கநாதன் ஆகியோர் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நகரத் துணைத் தலைவர் ராஜேஷ் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டார் . பாரதிபுரம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார் .வெங்கடக்குப்பம் கிராமத்தில் அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் ரயில் விபத்தில் மரணமடைந்தார் அவரது இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடன் வடலூர் நகரத் தலைவர் திருமுருகன், வடலூர் நகர பொதுச்செயலாளர் கே.எஸ்.ஆர். பாலு மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment