பணி மாறுதல் காரணமாக இவர் தற்பொழுது புவனகிரி அடுத்த பி முட்லூர் அரசு மேல்நிலை பணியமர்த்தப்பட்டுள்ளார், இதனை எடுத்து அவர் மருங்கூர் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு செய்யப்பட்டு இன்று பி.முட்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்றுக் கொண்டார், இவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவருக்கு பிரியா விடை அளித்து அவரை ஒன்று சேர்ந்து அழைத்து வந்து அவர் புதிதாக பணியமர்த்தப்பட்ட பள்ளியில் விட்டுச் சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து மருங்கூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஜேந்திர பாண்டியன் அவர்கள் தெரிவிக்கையில் ஆசிரியர் வேல்முருகன் அவர்கள் பணிபுரிந்த நான்கு ஆண்டுகளில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் மேலும் பள்ளிக்கு வராமல் சிறுவயதிலேயே படிப்பை தொடர முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்களை தேடிச் சென்று ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளிக்கு வரவழைத்துள்ளார்.
மேலும் ரோட்டரி சங்க உதவியுடன் பள்ளியை சுற்றி மரம் நடும் விழா பள்ளியில் பயின்று 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசளித்தல் சக ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பால் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டது மேலும் இவரின் செயல்பாடு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு இவர் மீண்டும் இதே பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றினால் மேலும் பல வளர்ச்சி பணிகள் நோக்கி மருங்கூர் அரசு பள்ளி செல்லும் ஆனால் அவரின் பணி மாறுதல் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவரை நல்ல முறையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இணைந்து மரியாதை செலுத்தும் விதமாக அழைத்துச் சென்றுள்ளோம் மேலும் அவர் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து பணிகளை சிறப்பாக தொடங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment