அதேபோல் மற்றொரு விபத்து வழக்கான MCOP No.1826/2003-ல் இளவர் மனுதாரர்களுக்கு சேரவேண்டிய இழப்பீடு தொகை ரூ.5,01,482/-யை கடலூர் யூகோ வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது. கடந்த 2012 -ல் லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோர் மேஜர் ஆன பின்னர் வழக்கறிஞர் M.R.ஜெயசங்கர் மூலம் இழப்பீடு தொகை கோரி மனு செய்ததால், தவறுதலாக 826/03 வழக்கிற்கு பதிலாக 1826/03-ல் உள்ள அதிக தொகையான வட்டியுடன் ரூ.5,40,540/-ஐ நீதிமன்றத்தை ஏமாற்றி பெற்றுள்ளார்கள்.
அந்த நீதிமன்றத்தில் உதவி சிரஸ்தாரராக பணிபுரிந்து வந்த குணாளன் இதனை தெரிந்து கொண்டு 826/03 – வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடிச் சென்று நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்ற ஒரு போலியான கடிதம் தயார் செய்து கடலூர் வன்னாரபாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியோடு, கனரா வங்கியில் கொடுத்து கடலூர் வண்டிபாளையத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் பெயருக்கு ரூ.2,42,000/- த்திற்கு DD பெற்று அதனை கடலூர் யூகோ வங்கியில் சத்தியமூர்த்தி பெயரில் கணக்கு துவங்கி காசாக்கம் செய்து பணத்தை எடுத்து மூவரும் நீதிமன்றத்தை ஏமாற்றி பயன் அடைந்துள்ளார்கள்.
அதேபோல் 826/03 வழக்கில் மேலும் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட நீதிமன்றத்தை ஏமாற்றி அந்த பணத்தையும் பெறவேண்டும் என்று வழக்கறிஞர் M.R.ஜெயசங்கர் மீண்டும் லாவண்யா மற்றும் சரண்யா மூலம் இழப்பீடு தொகை கேட்டு மனு செய்துள்ளார். இது சம்மந்தமாக கடலூர் முதன்மை சார்பு நீதிபதி .அன்வர் சதாத் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவுப்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ். காவல் ஆய்வாளர் திருமதி. துர்கா ஆகியோர் தலைமையில் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு 31.05.2023 என சத்தியமூர்த்தி மற்றும் சிவதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த குணாளன் சுமார் ஒருமாத காலமாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment