தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வீராணம் ஏரியில் ஓராண்டுக்கு மீன்பிடி வலைகளின் தன்மையை பொறுத்து ஆண்டுக்கு ரூ.300 ரூபாயிலிருந்து 600, மற்றும் 1200 ரூபாய் வரை பதிவுக்கட்டணம் இருந்து வருகிறது. இதனை மீனவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் பதிவு செய்து விட்டு மீன்பிடிக்கலாம். தற்போதைய சூழலில் பதிவுசெய்யப்படாத நூற்றுக்கணக்கான மீனவர்களும் மீன்பிடித்து வருகின்றதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏரியில் முழுமையாகத்தண்ணீர் நிரம்பிய பிறகு மீன்வளத்துறை அதிகாரிகள்சில லட்சம் மீன்குஞ்சுகளை ஏரியில் விடுகின்றனர்.
இப்படியான நிலையில் சேத்தியாத்தோப்புப் பகுதியைச்சேர்ந்த நாகராஜ்(60) என்பவர் வாலாஜா ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரி மற்றும் இப்பகுதியில் உள்ள வாய்க்கால்களில் தனது சிறுவயது முதலே மீன்பிடித்து அதை விற்று அதில் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை எளிய முறையில் நடத்தி வந்தார். இவரின் சொற்ப வருமானத்தை வைத்து தான் இவரது குடும்பமே இயங்கி வருகிறது.இவ்வாறான சூழலில் நாகராஜ்மற்றும் பல மீனவர்களும் வீராணம் ஏரியில் கடந்த 22/6/2023 வியாழன் அன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
நாகராஜ் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதிக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரி மற்றும் பணியாளர்கள் அப்பகுதியில்மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் மீன்பிடிப்பதற்கான லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்க, அவரோசில நாட்களில் லைசென்ஸை புதுப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது மீன்வளத்துறை அதிகாரி மற்றும் பணியாளர்கள் நடப்பு தேதிலைசென்ஸ் இல்லாமல் மீன்பிடிக்கக்கூடாது எனக் கூறியபடி மீனவர் நாகராஜ் வைத்திருந்த மீன்பிடி வலையை கைப்பற்றும் நோக்கத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த வலையை தந்தால் அடுத்து நாம் வாய்க்காலில் கூட சென்று மீன் பிடிக்க முடியாதேஎன்ற எண்ணத்தில் வலையைத் தராமல் அவர் ஒரு புறம் இழுக்க மீன்வளத்துறை அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஒரு புறம் இழுக்க இதனால் அதிர்ச்சியும், மன அழுத்தமும் அடைந்த நாகராஜ் ஒருக்கட்டத்தில் கையில் இருந்த வலையை விட்டுவிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்தவர் பின்னர் மயங்கி படுத்துவிடுகிறார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மற்றும் மீன்வளத் துறையினரும் அவரை மீட்டு காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்கின்றனர் ஆனால். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீனவர் நாகராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இதனை அறிந்த நாகராஜ் குடும்பத்தினர் இருந்த ஒரே ஒரு வாழ்வாதார பிடிப்பும் போய்விட்டதே என மனம்நொந்து நாகராஜ் இறப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை செய்து வரும்போலீசார் மீனவர் நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைந்தனர். தற்போது குடும்பத் தலைவரின் சொற்ப வருமானமும் இல்லாமல் அந்த குடும்பம் கண்ணீர்க்கடலில் தத்தளிக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக கதறும் அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என அவரது குடும்பத்தினரும், இப்பகுதியின்ஒட்டுமொத்த மீனவர்களும் வேதனையோடு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment