கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.கொளக்குடி கிராமத்தில் மெயின் ரோட்டில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேற்படி கோயிலுக்கு பூஜை செய்வதற்காக நேற்று காலை சுமார் 10.00 மணிக்கு கஸ்தூரி (கோயில் நிர்வாகம்) திறந்துள்ளார். அப்போது உள்ளே இருந்த உண்டியல் திறந்து இருந்துள்ளது. அதைக் கண்டு கஸ்தூரி மகன் சண்முகம் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்த உடன் கஸ்தூரி தனது மகனிடம் கோயில் உண்டியல் திறந்து திருட்டு போனது குறித்து கூறி உள்ளார் அவர் சென்று பார்க்கும் போது கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடுபோய் உள்ளது.
இந்த கோயிலின் வெளிப்பூட்டை உடைக்காமல் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே இருந்த 3அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 12,000 ரூபாய் பணத்தை யாரோ மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளதாக கோயில் தர்மகர்த்தா சண்முகம் தெரிவிக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment