இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்புரையாற்றினார்நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் தெய்வசிகாமணி திட்ட நோக்கயுரையாற்றினார். மாவட்ட சித்தா அலுவலர் அர்ஜுனன் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இயற்கை மருத்துவர் செல்வக்குமார் யோகாசனம், சூரிய நமஸ்காரம் மற்றும் மூச்சுப்பயிற்சி குறித்த செயல் விளக்கம் தந்தார்.ஏ.ஆர்.டி மருத்துவர் ஸ்ரீதரன் வாழ்த்துரை வழங்கினார். தேசிய இளையோர் படைத் தொண்டர் ஜெயராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் (ஓய்வு) நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி செய்திருந்தார். நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் இராம்குமார், நிகிதா, சசிக்குமார், சுஜிதா, அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர், அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment