ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தொழில் துறை அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் சி சம்பத் தலைமை தாங்கினார் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருன்மொழி தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியன் ,முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சொரத்தூர் இரா. ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேசுகையில், 2014 ஆம் ஆண்டு கரூர் சென்ற ஸ்டாலின் ஒன்றா இரண்டா என்று பாடல் பாடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை வைத்தவர் என்றும் நில அபகரிப்பு மாவட்டம் என்றும் கூறிய ஸ்டாலின் இன்று ஏன் திமுகவில் சேர்த்துள்ளார் என்றும் பேசினார்.
மேலும் பேசுகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா இளவரசி, டிடிவி தினகரன் ஆகியோரை ஏமாற்றி பழி வாங்கியவர் செந்தில் பாலாஜி என்றும் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கூட நிம்மதியாக கொண்டாட முடியாத நிலை இது ஸ்டாலினுக்கு தேவையா என்று பேசினார் டாஸ்மாக் ஆரம்பிக்கும் போது 6700 கோடி வருமானம் ஆனால் 47,000 கோடி அரசு கஜானாவை நிரப்பக்கூடிய துறையை சரியாக நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றும் பேசினார்.
மேலும் பேசுகையில் டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடுத்த நாளே பதவி விலகினார். டெல்லியின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயின் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டவுடன் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். மகாராஷ்டிராவின் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த நவாப் மாலிக் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டவுடன் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சராக இருந்த அணில் வசந்தராவ் தேஷ்முக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட உடன் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை ஏன் அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை. அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்று ஸ்டாலின் அரசு ஏன் அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கின்றது.
ஸ்டாலின் தன் சுயநலத்திற்காகவே செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருக்கின்றார். 2011-16 களில் இரண்டாவது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது திமுகவின் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார். இவ்வளவு குற்றச்சாட்டுகளை கூறிய ஸ்டாலின் 2021ல் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து இரண்டு முக்கிய துறைகளை ஏன் கொடுத்துள்ளார்.
அமலாக்க துறையால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்போது சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் எதற்காக இவ்வளவு பாதுகாப்பு கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் கி.வீரமணி, கே. எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், தவாக தி. வேல்முருகன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர்கள் எதற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை உடனடியாக மருத்துவமனையில் சென்று பார்த்தார்கள் என்று தெரியவில்லை. கடலூர் மாவட்ட மக்கள் நலனுக்காக இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவரையோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து மக்கள் குறைகளை இவர்கள் கூறியது உண்டா. கடலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, கல்வி,சுகாதாரம், மனித வள மேம்பாடு குறித்து இவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தது உண்டா. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவதாக இருந்த ஹால்தியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவர இவர்கள் பாடுபட்டதுண்டா. மக்கள் நலனை சிந்திக்காத இவர்கள் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதல்வரின் எடுபிடிகளாக சென்று பார்த்துள்ளார்கள் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்று பேசினார்.
மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜே மாநில மீனவர் அணி கே.என்.தங்கமணி, ஆர்.வி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, மணிமேகலை தஷ்னா, மோகன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் திருப்பாதிரிப்புலியூர் கெமிக்கல் மாதவன், புதுப்பாளையம் பாலகிருஷ்ணன், துறைமுகம் தங்க வினோத், மஞ்சகுப்பம் வெங்கட்ராமன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக கடலூர் முதுநகர் பகுதி செயலாளர் வ .கந்தன் தலைமையில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர் இறுதியில் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment