தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுவாக்குவது தான் ஆளூநர் செய்ய வேண்டிய வேலை. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பது பாஜக தலைவராகவே நடந்து கொள்ளுவதும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சனாதன தர்மம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பேசுவதும் தொடர்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசு கொள்கை முடிவுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளூநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானதுடன், அரசமைப்பு சட்டத்திற்கும் அரவது பதவிப்பிரமானத்திற்கும் எதிரானதாகும் என்பதால், தமிழகத்தில் ஆளூநர் செல்லுமிடங்களில் கருப்பு கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தமிழக மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 21.06.2023 இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் வடலூர் அருகே உள்ள மருதூரில் வள்ளலார் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ஆளூநர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆளூநருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் கடலூர் ஜவான் பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ மாதவன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திர சேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என் ராமலிங்கம் ஜெ ராமலிங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் செயலாளர் ரஹீம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் தண்டபாணி மாமன்ற உறுப்பினர் அருள் பாபு மக்கள் அதிகார பொறுப்பாளர் பாலு ரவி இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் ரவிகுமார் முருகன் ராஜா ரவிகுமார் மணிக்கண்டன், விசிக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் விணோத் சரண் சத்ஷ் ஹிட்லர் கிருஷ்ணன் பரதன் ஆறுமுகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் ராஜேஷ் கண்ணன் மாநகர செயலாளர் அமர்நாத் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான் ஆளாவந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் ஷெக் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் ஏராளமானமானோர் கருப்பு கொடியுடன் ஆளுநரே வெளியேறு என முழக்கமிட்டார்கள்.
பின்பு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து ஆளுநர் சென்றதும் இரவு எட்டு மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.
No comments:
Post a Comment