கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சுத்துக்குழி கிராமத்தில் சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை கிராமத்தை இணைக்கும் பாசன வாய்க்கால் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய பாலம் இடிப்பதால் தற்காலிகமாக தரைப்பாலம் பாசன வாய்க்காலில் அருகிலேயே அமைக்கப்பட்டது.இந்த தரைப்பாலம், பாசன வாய்க்காலில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் முற்றிலும் கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் இப்பகுதி கிராமமக்கள் தங்களது பகுதியிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து சில தமிழககுரல் உட்பட பல செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகள் இதனை செய்தியாக வெளியிட்டனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இரு நாளில் தரைப்பாலத்தை அமைத்துள்ளனர். இதனால் கிராமமக்கள் உடனடியாக தரைப்பாலம் அமைக்கப்பட்டதை வரவேற்கின்றனர்.
No comments:
Post a Comment