சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் கார் மரத்தில் மோதி ஒரு குழந்தை ஒரு ஆண் ஒரு பெண் என மூவர் மருத்துவ சிகிச்சையில்... விபத்துக்குகாரணம் என்ன? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் கார் மரத்தில் மோதி ஒரு குழந்தை ஒரு ஆண் ஒரு பெண் என மூவர் மருத்துவ சிகிச்சையில்... விபத்துக்குகாரணம் என்ன?


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமம் உள்ளது. இவ்வழியாக கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவ்வாறு சென்று கொண்டிருந்த அந்த சொகுசு கார்  திடீரெனதனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின ஓரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு நின்றது. நல்ல வேலையாக இதன் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கடையில் மோதவில்லை என்பது ஒரு ஆறுதல் செய்தி.இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.இதனையடுத்து  காரில் பயணம் செய்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் கைக்குழந்தை ஆகியோர்  காயங்களுடன் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டனர்.


இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக சாலை வளைவுப்பகுதி மற்றும் அதிக விபத்து ஏற்படும் இந்தப் பகுதிகளில் சாலை ஓரங்களில் விபத்துத் தடுப்பு இரும்பு பட்டைகள் பொருத்தப்படுவது வழக்கம். அப்படியான தடுப்புப் பட்டைகள் பொருத்தப்பட்டு இருந்திருந்தால் இப்படியான விபத்து தடுக்கப்பட்டிருக்கலாம் என்று இப்பகுதியினர் மற்றும் விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள வீட்டினர்கள் தெரிவிக்கிறார்கள். 


இதே இடத்தில் சாலையின்  மறுபுறம் இரும்புப் பட்டைகள் வைத்திருப்பது போல விபத்து நடந்த இப்பக்கமும் அதே தூர அளவுக்கு இரும்புப்பட்டைகள் பொருத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பயணிகள், இப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment