சொகுசு கார் புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று காரின் ஓட்டுனரின் தூக்கக் கலக்கத்தால் எதிர்பாராமல் நின்று கொண்டிருந்த லாரியில் மோதியது. இதில் காரில் வந்த தருண்ராஜ் (19) தருண்ராஜின் தாயார் பரிமளா (42) ஆகிய இருவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் இருந்த பரிமளாவின் கணவர் பழனிவேல் (44), ஓட்டுநர் விக்கி (28) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோர விபத்தானது அதிகாலை 3:30 மணியளவில் நடந்துள்ளது. சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் கார் சென்று மோதிய லாரியானது அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த புவனகிரி விருத்தாசலம் சாலையில் இதுவரை நடந்த பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் அனைத்துமே நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதிதான் விபத்து ஏற்பட்டுள்ளது. பரபரப்பான போக்குவரத்து சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் இதுபோன்று வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment