மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம் கால்நடை பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பி ஜே பி யின் மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் செல்வம் அவர்களும் கலந்து கொண்டனர்,, இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஒரு குழந்தைக்கு கதிர்வேலன் என்ற பெயரிட்டு மகிழ்ந்தார்.
அதேபோல் தினகரன் கட்சியில் இருந்து 25 பேர் மத்திய அமைச்சர் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தனர், விழா மேடையில் சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் எல். முருகன் அவர்கள் பேசுகையில் வருகின்ற 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் என்றும், இந்தியாவில் உள்கட்டமைப்புக்கு பல்வேறு திட்டங்களை தற்போதைய அரசு செயல்படுத்தி வருவதாகவும், பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருவதாகவும், கடலூரில் நடைபெற்ற ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு ஐந்தாண்டு கால திட்டங்களை வகுத்து நாட்டை பின்னடைவு கொண்டு சென்றதாக கூறிப்பிட்டார். சமூகநீதியை பற்றி பேச திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அறுகதை இல்லாதவர்கள் என்று கூறினார். சொல்வதை செய்பவர் நரேந்திர மோடி என்றும் சிதம்பரம் கோவில் கைவைப்பவர்கள் குலநாசம் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
No comments:
Post a Comment