சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கேப்டனின் வழிகாட்டுதல் படி அனைவரும் கழகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து கட்சி பணி செய்திட வேண்டும் என்றும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், கடலூர் மாவட்டத்திற்கு விஜயப்ரபாகரன் வருகையையொட்டி மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட கழக செயலாளர் சிவக்கொழுந்து கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், மாவட்ட கழக பொருளாளர் ராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், தலைமை பேச்சாளர் தென்னவன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், செம்பை, தங்கபொன். தனசேகர், சேகர், முத்து, மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி செயலாளர் அரசிலங்குமாரி, துணை செயலாளர் குணவதி, இளைஞரணி, கேப்டன் மன்றம், வார்டு முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முடிவில் நகர பொருளாளரும், 13 வது நகர மன்ற உறுப்பினரான கருணாநிதி நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment