தொடர்ந்து 13 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் கொடியேற்றத்துடன் உபநாசியாருடன் வீதி புறப்பாடு ஹம்ச வாகனம்,2ம் நாள் நிகழ்ச்சி திருப்பல்லக்கு சூரியபிரபை,3ம் நாள் ராஜ கோபாலன் சேவை,சேஷவாகனம், 4ம் நாள் விமானத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் சேவைதங்க கருட சேவை, 5ம் நாள் நாச்சியார் திருக்கோலம் ஊஞ்சல் சேவை,ஹனுமந்த வாகனம், 6ம் நாள் யானை வாகனம், 7ம் நாள் 108 கலச திருமஞ்சனம்,புண்ணிய கோடி வாகனம், 8ம் நாள் வெண்ணெய் தாழி உற்சவம், குதிரை வாகனம்வேடுபறி உற்சவம், 9ம் நாள் கோபுர வாசலில் தீர்த்தவாரி திருத்தேர், பத்தாம் நாள் புஷ்ப யாக உற்சவம், 11ம் நாள் திருக்கல்யாண உற்சவம், 12ஆம் நாள் விடையாற்றி உற்சவம் ,ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பா. வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் சாரங்கபாணி நாயுடு,ராதாகிருஷ்ணன் நாயுடு, கிஷோர்நாயுடு,கமலநாதன்நாயுடு, கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் தலைமை உதவியாளர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment