தமிழகம் (கடலூர் மாவட்டம்) மற்றும் புதுச்சேரி மாநில எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2023

தமிழகம் (கடலூர் மாவட்டம்) மற்றும் புதுச்சேரி மாநில எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.


தமிழகம் (கடலூர் மாவட்டம்) மற்றும் புதுச்சேரி மாநில எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில், புதுச்சேரி மாநிலம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நர சைதன்யா  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இரு மாநில எல்லை பகுதியில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து, குற்ற செயலை தடுப்பது மற்றும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்தும், சட்டவிரோதமான கஞ்சா, மதுபானம் கடத்தி விற்பனை செய்யும் நபர்களின் குற்ற செயலை தடுப்பது குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்வது குறித்தும், ஒரு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டவுடன் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், மீனவர்கள் பிரச்சனை, கோயில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் முக்கிய விருந்தினர்கள் வருகையின்போது விருந்தினர்களின் பயணத் திட்டம் சிறப்பாக அமைய இரு மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்வது குறித்தும், குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் இணைந்து ரோந்து பணி மேற்கொள்வது குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பொதுமக்களுக்கு பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது முக்கிய நோக்கமாகும். கடலூர் மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு சபியுல்லா, விஜிகுமார்,  நாகராஜன், புதுச்சேரி மாநில காவல் கண்காணிப்பாளர்கள் ரவிகுமார்,வீரவல்லவன், ஜிந்தா கோதண்டராமன், மோகன்குமார்,  செல்வம் கடலூர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம் மற்றும் கடலூர் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் எல்லை காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/