கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் ஆயிப்பேட்டை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா நடைபெற்றது. இந்த முகாம் துவக்க விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகரன் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் வி. மதுபாலன் முன்னிலை வகித்தார். கடலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் டாக்டர்ஆர். மோகன் வரவேற்புரையாற்றினார்.
முகாமை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே .பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும் முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முகாமில் சென்னை கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் சுமதி மற்றும் உதவி இயக்குனர் ராஜேஷ் குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.
முகாமில் 35 கால்நடைகளுக்கு சிகிச்சையும், 480 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 64 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும்,15 கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கமும், 40 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலும் ,40 நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி, 386 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும், 44 கிலோ தாது உப்புகள் கலவை கால்நடை வளர்ப்புகளுக்கும் மொத்தம் 1158 கால்நடைகள் முகாமில் பயன்பெற்றன. இறுதியில் விருத்தாச்சலம் உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment