கடலூர் காவலர் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த அறிய வாய்ப்பான பயிற்சியை சிறந்த முறையில் முடித்து வாழ்வின் முன்னேற்ற பாதைக்கு செல்ல ஏதுவாக அமையும் என்றும் பயிற்சி பெற்றிருப்பது உங்களை காத்துக்கொள்ளவோ நாட்டை காக்கவோ மட்டும் பயிற்சி அல்ல சிறந்த குடிமகனாக உருவாக்குவதுதான் பயிற்சி உங்கள் வாழ்க்கையில் இன்னும் 10ஆண்டுகள் கழித்து நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் சரி சாதாரண மனிதர்கள் போன்று இல்லாமல் நீங்கள் மாறும் பட்ட கோணத்தில் செயல்களின் மூலம் வெற்றியடைய இந்த பயிற்சி உங்களுக்கு உதவும் திறன் மேம்பாட்டு பயிற்சி காலத்தில் கற்றுக்கொண்ட திறனை மேம்படுத்தி உங்கள் வாழ்வையும் மேம்படுத்த முயற்சி மேற்க் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் பரிசுகள் வழங்கியும் பாராட்டப்பட்டனர் இந்நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஆபிசர் பிரப்பேரிங் அகாடமி ஈசன், கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன்,மீன் வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியன், கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் திருமதி.பத்மா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment