சேத்தியாத்தோப்பு,பூ.ஆதனூர் அரசுப் பள்ளிகளுக்கு புவனகிரி எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம்; மூலம்மேஜை மற்றும் இருக்கைகளை அருண்மொழிதேவன் எம் எல் ஏ வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

சேத்தியாத்தோப்பு,பூ.ஆதனூர் அரசுப் பள்ளிகளுக்கு புவனகிரி எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம்; மூலம்மேஜை மற்றும் இருக்கைகளை அருண்மொழிதேவன் எம் எல் ஏ வழங்கினார்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்புப் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகள் தேவைப்பட்டதால் அப்பள்ளியின் நிர்வாகம் தொகுதி எம்எல்ஏ அருண்மொழிதேவனிடம் வைத்த கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகள் ஆகியவற்றை நேற்று 27/6/2023 செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அதிமுக நகர செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன், முன்னாள் நகரச்செயலாளர் எஸ் கே நன்மாறன், புவனகிரி மேற்கு ஒன்றிய ஊராட்சி செயலர் ஜெயசீலன்,நகரத் துணைச் செயலாளர் சம்பத், அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, பேரூராட்சி வார்டு செயலாளர் கே பி ஜி கார்த்திகேயன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரமூர்த்தி, புவனகிரி மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் பிருத்திவி, வார்டு செயலாளர்கள் குணசேகரன்,  லலிதா பாலகுரு,சித்ரா, ரவி, திலீபன், அஞ்சாபுலி, பாலசுந்தரம், மற்றும் மகேந்திரன், கமலக்கண்ணன், அண்ணா பிரபாகரன், அரங்கப்பன், ஆதனூர் பாலு, ஜபருல்லா,, செல்வகுமார், மாரி மற்றும் வள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எனபலர் கலந்து கொண்டனர்.

மேலும் சேத்தியாத்தோப்புஅருகே உள்ளபூ.ஆதனூர் கிராமத்தில் உள்ள  அரசு  பள்ளிக்கு மேசை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியப்பெருந்தலைவரர் சி. என். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. புவனகிரி எம் எல் ஏ அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பள்ளிக்கு மேஜைகள் இருக்கைகள் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/